இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதல் தொடர்கிறது .

 


இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதலை தொடர்ந்து டெல் அவிவ் மற்றும் தெஹ்ரானில் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 
 
அத்துடன், இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக, ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 
 
இதேவேளை, இஸ்ரேலினால், ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வான் வழித் தாக்குதல்களில் அமெரிக்கா இன்னும் இணைந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.