சிவில் பாதுகாப்பு கொன்ஸ்டபிள் காட்டு யானையால் தாக்குண்டு கொல்லப்பட்டுள்ளார்.

 


வில்பத்து சிவில் பாதுகாப்புத் துறை முகாமில் பணியாற்றிய, டி.எம். அனுரகுமார திசாநாயக்க என்ற 47 வயதான, சிவில் பாதுகாப்பு கொன்ஸ்டபிள் காட்டு யானையால் தாக்குண்டு கொல்லப்பட்டுள்ளார். 
 
மகாவிலச்சிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட, பெமடுவ பகுதியிலேயே அவர் காட்டு யானையால் மிதித்துக் கொல்லப்பட்டார். 
 
பாதிக்கப்பட்டவர், கடந்த சனிக்கிழமை இரவு தனது பூசணிக்காய்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்கத் தனது சேனைக்குச் சென்றிருந்தார். 
 
எனினும், அவர் வழக்கம் போல் வீடு திரும்பவில்லை. 
 
இதனால் மறுநாள் காலை அவரைத் தேடிச் சென்றபோது, அவரின் சடலத்தைக் கண்டதாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளார்.