District Media Unit News
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின். சிந்தனைக்கமைய. அமைச்சர் விமல் ரத்னா
யக்கவின் வழிகாட்டுதலில். நாடெங்கும் அமுல் நடத்தப்படும் ஆயிரம்
கிராமிய வீதிகள் அபிவிருத்தி திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும்
வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்
ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான்
கும்பிலாமடு வீதியினை கொங்கிரீட் வீதியாக மாற்றும் வேலை திட்டம் ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
இம்மாட்டத்தில். கிராமிய வீதிகள்14 புதிதாக
நிறுவப்பட வுள்ளன இதற்கென 58 கோடி ரூபாய் செலவிட போக்குவரத்து அமைச்சு.
அனுமதி வழங்கி இருக்கின்றது. இன்று இந்த ஆரம்ப வேலைத் திட்டத்தை தேசிய
மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி
பிரபு வைபவ ரீதியாக இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுதலை வரின் இணைப்புச் செயலாளர். கே
திலகநாதன். தேசிய மக்கள் சக்தியின். மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி
தலைவியும் மட்டக் களப்பு மாநகர சபை. உறுப்பினருமான வனிதா செல்லப் பெருமாள்.
மட்டக்களப்பு மாநகர சப உறுப்பினர். கே ஜோன்சன். மாவட்ட அரசாங்க அதிபர்
ஜஸ்டினா முரளிதரன். வீதி அபிவி ருத்தி அதிகார சபையின் பிரதம எந்திரி பி.
பரமன். நிறைவேற்றுப் பொறியாளர் இ .லிங்கேஸ்வரன்,மண்முனை வடக்கு பிரதேச
செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம். உள்ளிட்ட பல பிரமுகர்கள்
இங்கு பிரசன்னமாக இருந்தனர்.
குறித்த கும்பிளான் மாடு கிராமிய வீதி
புதிதாக நிறுவப்படுவதன் மூலம். பிரதேசத்தில்மீனவர்கள் விவசாயிகள் பாடசாலை
மாண வர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அனுப வித்து வந்த
பெரும் கஷ்டத்துக்கு தீர்வு கிட்டுவதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.















