தண்ணீர் தொட்டியில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

 


தொட்டியில் உள்ள தண்ணீரில் இருந்து இளைஞர் ஒருவரின்  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் இணுவில் மேற்கைச் சேர்ந்த சசிகுமார் திவான்சன் (வயது 20) என்ற இளைஞராவார்.

மேற்படி இளைஞருக்கு வலிப்பு வருவதாகவும் நேற்று முன்தினம் புதன்கிழமை (25) பிற்பகல் தந்தையாரின் மரக்காலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார் 

ஆனால் அவர் தெல்லிப்பளையில் உள்ள அவர்களின்  பிறிதொரு வீட்டில் தொட்டியில் உள்ள தண்ணீரில் இருந்து  சடலமாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த மரணம் தொடர்பில்  யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார்  விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை காங்கேசன்துறை பொலிஸார் நெறிப்படுத்தினர்.