காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவர் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது.

 


அம்பாறை நகரில் நேற்றைய தினம் காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவர் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
மணல் போக்குவரத்தை எவ்வித இடையூறுமின்றி மேற்கொள்வதற்கு அம்பாறையைச் சேர்ந்த வர்த்தகரொருவரிடம் 25,000 ரூபாயை கையூட்டலாக பெற்றமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அம்பாறை வலய குற்ற விசாரணை பிரிவைச் சேர்ந்த காவல்துறை சார்ஜன்ட்கள் இருவரே கைதாகியுள்ளனர்.
 
இந்தநிலையில், சந்தேகநபர்கள் நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.