பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்-நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை .

 


ஈரான் - இஸ்ரேல் மோதலால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை. எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்கு தேவையான எரிபொருட்கள் நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு மேலதிகமாக மேலும் 4 எரிபொருள் கப்பல்கள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இதற்கமைய 160,000 மெட்ரின் தொன் மசகு எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் மேலும் 90,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் நாட்டை வந்தடையவுள்ளது.

தற்போது நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்கு போதுமானது என்பதோடு, இந்த முற்பதிவுகளும் இனிவரும் நாட்களில் கிடைக்கப் பெறவுள்ளன. 

எனவே மக்கள் வீண் அச்சம் கொண்டு, வரிசைகளில் நின்று எரிபொருளைப் பெற்று வீடுகளில் தேவைக்கதிகமாக களஞ்சியப்படுத்த வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.