தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று, பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 22. பேர் உயிரிழப்பு

 


எகிப்தின் மினொபியா மாகாணத்தில், 22 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று, பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 
 
குறித்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
மேலும் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.