தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 22 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம்

 


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்ததாக கூறப்படும் 22 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்களே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.