மட்டக்களப்பு மைலம்பாவெளி உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தர் பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த விளையாட்டுவிழாவும், சித்திரை புத்தாண்டு கொண்டாட்டமும் -2025



 























































"வழிதேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" எனும் தொனிப் பொருளில்    மட்டக்களப்பு      மைலம்பாவெளி உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தர் பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த விளையாட்டுவிழாவும்  சித்திரைபுத்தாண்டு  கொண்டாட்டமும்   சனிக்கிழமை (22.06.2025)மயிலம்பாவெளி உதவும் கரங்கள் இல்லத்தில் இடம்பெற்றது.

 உதவும் கரங்கள் அமைப்பின் தலைவரும்,மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளருமான ச.ஜெயராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,மட்டக்களப்பின் பிரபல தொழில் அதிபர் N.ஜெகதீசன் பிரதம அதிதியாகவும்,  சிறப்பு அதிதியாக அகிலன் அறக்கட்டளை பணிப்பாளர் V.R.  மகேந்திரன் அவர்களும் , கௌரவ அத்திகளாக  கவிஞர், களப்பூர் தங்கா  கனடா- கோ .தங்கவடிவேல், கோவிலூர் செல்வராஜன் -இ .செல்வராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
அழைப்பு அதிதிகளாக அ.நிர்மோகன் ,பி .மனோகரன் , திருமதி  .S.லக்ஷானி ,திருமதி .ஐ.கயல் ரூபன் ஆகியோர் பங்கேற்றனர் .
 
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாணவர்களினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதை  தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் தமிழ்மொழி வாழ்த்து பாடப்பட்டு வரவேற்பு நடனத்துடன்   நிகழ்வுகள் வெகுசிறப்பாக ஆரம்பமானது .

பிரதம அதிதி ,சிறப்பு அதிதி ,மற்றும் கௌரவ அதிதி ஆகியோர் உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர்  ச.ஜெயராஜா அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு  நினைவுபரிசுகளும் வழங்கி வைத்தார் .
தொடர்ந்து மாணவர்கள்,உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றியீட்டியோருக்குப் பெறுமதியான பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை உதவும் கரங்கள்  அமைப்பு  21வது ஆண்டில் கால்பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது

FREELANCER