கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதன்போது வசந்த மண்டப பூசைகள் என்பன இடம்பெற்று கொடிச்சீலை உள் வீதி வலம் வந்து கொடியேற்றம் இடம்பெற்று தம்ப அபிசேகம் இடம்பெற்றது
உற்சவ கால பூசைகள் யாவும் மஹோற்சவ கால பிரதம குரு ஆகமபிரிவினா, பிரதிஸ்டா சாகரம் 'வாமதேவ சிவாச்சாரியார், ஆர்ச்சார்ய பூசணம் சிவஸ்ரீ சபா பாஸ்கரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம் வரலாற்றைக் கொண்ட ஆலமாகும். இங்குள்ள மூல விக்கிரகம் கைலாய மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கற்களால் உருவாக்கப்பட்ட ஆலமாகும்.
ந.குகதர்சன்