மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் இன்று காலை சிற்றூர்ந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் இன்று காலை சிற்றூர்ந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். 
 
வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கிப் பயணித்த சிற்றூர்ந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. 
 
இந்த விபத்தில் சிற்றூர்ந்தின் சாரதியும், 15 வயதுடைய சிறுமி ஒருவருமே உயிரிழந்தனர். 
 
அத்துடன், சிறுமியின் தாய் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 
 
உயிரிழந்தவர்களின் உடலங்கள் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.