முதலாம் வகுப்பில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

 


மாதம்பே, புனித செபஸ்டியன் பாடசாலையின் முதலாம் வகுப்பில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக  நேற்றைய தினம்   மாதம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

குறித்த மாணவர்களின் உடல்கள் சிவப்பு நிறமாக மாறி அரிப்பு தன்மை ஏற்பட்டதை, கவனித்த வகுப்பாசிரியர்  மாணவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். 

அடிப்படை சிகிச்சையின் பின்னர்  மாணவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.