திருகோணமலை மெக்கசா உள்ளரங்கு விளையாட்டு மைதானத்தில் (21) சனிக்கிழமை 10 மணியளவில் ஆண், பெண் இருபாலாருக்கு ஜூடோ போட்டி இடம் பெற்றது.
மாவட்ட மட்டத்தில் தெரிவாகி இருந்த அணிகள் மாகாண மட்ட போட்டிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அவ்வகையில் 09 தங்கப்பதக்கங்களை பெற்று முதலாம் இடத்தை திருகோணமலை வீரர்களும் , 05 தங்கப் பதக்கங்களை பெற்று இரண்டாவது இடத்தை மட்டக்களப்பு வீரர்களும் மற்றும் 03 தங்க பதக்கங்களை பெற்று மூன்றாவது இடத்தை
அம்பாறை வீரர்களும் பெற்றுக்கொண்டனர்.
ஆண்கள்,பெண்கள் பிரிவில் முதலாம்,இரண்டாம் இடத்தினை பெற்ற வீரர்கள் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தேசிய மட்ட போட்டியில் பங்குபற்ற உள்ளனர்.
திருகோணமலை விளையாட்டு திணைக்கள உத்தியோகஸ்தர் கே.விமலசேன
தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தேசிய அங்கத்துவம் உடைய யூடோ
நடுவர்கள் மத்தியஸ்தம் வகித்தனர்.