வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.



 





வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை  4.30 மணியளவில், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார், யாழில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் ஒருவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில், நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 52 வயதான மதகுரு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரின் மனைவி, இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்தவர்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் உட்பட இருவர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காரை செலுத்திச் சென்றவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, ஓமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.