பிரபல பாடசாலை ஆசிரியரின் வெறித்தனமான தாக்குதலில் மாணவர்கள் பலர் காயம்!

 



யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர், வகுப்பு ஒன்றிற்கு சென்று சத்தம் எழுப்பிய மாணவர்கள் யார் என கேள்வி கேட்டபோது,
மாணவர்கள் பதில் வழங்காத நிலையில் மாணவர்கள் மீது கதிரையால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது,
ஆசிரியர் மாணவர்கள் மீது தாக்கியது உண்மை எனவும் ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பாடசாலை என்ற வகையில் நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தாம் எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.