கடந்த கால அரசாங்கத்துடன் இப்பகுதியில் உள்ள அமைச்சர்களும் தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கு உடந்தையாக இருந்தார்கள் - பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஈ ஸ்ரீநாத்

 

 


 

கடந்த கால அரசாங்கத்துடன் இப்பகுதியில் உள்ள அமைச்சர்களும் தமிழ் மக்களின்  காணி அபகரிப்புக்கு உடந்தையாக இருந்தார்கள் - இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஈ ஸ்ரீநாத் இவ்வாறு தெரிவித்தார்

 ஜனாதிபதி தமிழ் மக்களின்  அரசியல் கைதிகளின் விடுவிப்பு ,காணி விடுவிப்பு காணாமல் ஆக்கப்பட்டவர் விவகாரத்தின் நீதி கேட்டிருந்தோம்  இது சம்பந்தமாக  தொடர்ச்சியாக பேசுவோம் என தெரிவித்தார்

 அதேவேளை பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி பணிகள் பற்றியும் கேட்டிருந்தோம் இதுவரை பதில் கிடைக்கவில்லை

 பேரினவாத  கட்சிகள் எமது வாக்குகளை குறிவைத்து பணியாற்றுகின்றனர் இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் இதற்காக   எம்மவர்களே களம் இறக்கப்படுகிறார்கள்

 அபிவிருத்தி என்ற போர்வையில் எமது வளங்கள் திட்டமிட்டு அபகரிக்கப்படுகின்றன வன இலாகா என்ற போர்வையில்  தற்போதைய புதிய அரசும் துணை போகின்றது என  நேற்று இரவு மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

வரதன்