கிழக்கு மாகாணத்திலும் தபால் தொழிற்சங்க வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் இரண்டாவது நாளாகவும் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்
இன்றைய தினமும் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அஞ்சல் அலுவலகம் தொழிற்சங்க வேலைநிறுத்தம் காரணமாக மூடப்பட்டிருந்தது இதனால் அஞ்சல் அலுவலக வேலைகள் தடைபட்டிருந்ததுடன் முக்கிய தேவை களுக்காக வந்த பொதுமக்கள் திரும்பிச் சென்றதையும் காணக் கூடியதாக இருந்தது
கடந்த இரண்டு தினங்களாக பொதுமக்கள் போக்குவரத்து போலீசாரின் தண்டப்பணம் செலுத்த முடியாமல் மிகவும் அசோகரிகங்களை எதிர்நோக்கி இருக்கின்றனர், இதனால் தூர விட தபால் சேவைகளும் முற்றாக பாதிக்க ப்பட்டுள்ளது

.jpeg)





