தாதியர்களின் எண்ணிக்கையை 40,000 லிருந்து 60,000 ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

 


ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் பிரிவுகளை உருவாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கண்டி கரலிய மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை தாதியர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச தாதியர் தின நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். 

மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை வைத்தியசாலை நிலைகளைத் தாண்டி, ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் பிரிவுகளை உருவாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் சனத்தொகையைக் கொண்ட நாடாக இலங்கை உள்ளது, இது எதிர்காலத்தில் 25% ஐ எட்டும். 

அந்த மக்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்குப் பதிலாக, அவர்களை அங்கேயே பராமரித்து அவர்களின் உடல்நிலையைக் கண்காணிக்க தேவையான வசதிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

எங்கள் அடுத்த இலக்கு தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதாகும். எங்கள் மருத்துவமனைகளின் படுக்கை வசதி மிகப் பெரியது. உங்கள் சேவைகளை மட்டுமே பெற்று ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்குவது கடினம், 

எனவே இந்த ஆண்டு 3,147 தாதியர் நியமனங்களை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் .

இணை சுகாதார பட்டதாரிகளையும் மீதமுள்ள 305 தாதியர் அதிகாரிகளையும் ஆட்சேரப்புச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தற்போதுள்ள தாதியர்களின் எண்ணிக்கையை 40,000 லிருந்து 60,000 ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மூன்று மாதங்களுக்குள் தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. என்றார்.