
கதிர்காம
கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழா திகதி உத்தியோகபூர்வமாக ருகுணு
மகா கதிர்காம தேவாலய நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம்
ஆண்டுக்கான கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த அசல பெரஹெரா ஆடிவேல் திருவிழா -
அசல் பெரஹரா ஜூன் 26ஆம் திகதி ஆரம்பமாகி, ஜூலை 07 ஆம் தேதி தீமிதிப்பு
வைபவம் இடம் பெற்று,, ஜுலை 10ஆம் திகதி மஹா பெரஹெரா இடம்பெற்று, ஜூலை 11ஆம்
திகதி காலை மாணிக்கங்கையில் நீர் வெட்டும் சடங்குடன் அதாவது
தீர்த்தத்துடன் நிறைவடையும்.
உண்மையில் மேற்கூறப்பட்ட சடங்குகள் தினங்கள் பௌத்த பாரம்பரிய முறைப்படி தீர்மானிக்கப்பட்டது.
சைவ
முறை அல்லது இந்துக் கோயில் என்ற ரீதியில் நோக்கினால் கதிர்காம ஆடிவேல்
விழா உற்சவம் ஆடி மாதத்தில் வரவேண்டும். ஆனால் இங்கு இவ் வருட உற்சவம் ஆனி
மாதத்தில் வருகிறது.
எனவே
ஆடிவேல் விழா என்று அழைப்பது பொருத்தமாக இருக்குமா என்பது வினாவாகும்.
அப்படி எனின் ஆனிவேல் விழா என்று அழைக்கலாமா? என்பதும் சைவர்களின் அடுத்த
வினாவாகும்.
இதேவேளை
யாழ்.செல்வச்சந்நதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிய ஜெயா வேல்சாமி
தலைமையிலான மிக நீண்ட 59 நாள் பாதயாத்திரை நேற்று 16 வது நாள் திருமலை
மாவட்டத்தை புல்மோட்டையை வந்தடைந்துள்ளது.
யூன் மாதம் 26ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடையும் என் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.
( வி.ரி.சகாதேவராஜா)