சர்வதேச நடன தின விழாவானது 2025.05.20. காலை மட்/ஆரையம்பதி இராம கிருஷ்ண
மிஷன் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது .
மட்டக்களப்பு
வலய கல்விப்பணிப்பாளர் திருமதி s. ரவிராஜ் பிரதம அதிதியாக பங்கேற்றார் ,
சிறப்பு அதிதியாக உதவி கல்வி பணிப்பாளர் அழகியல் திருமதி சிவஞான சோதி குரு
கலந்து கொண்டார் .
மண்முனை பற்று கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள் அழைப்பு அதிதியாக வருகை தந்திருந்தார்கள் .
சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட உதவி கல்வி பணிப்பாளர் (அழகியல்) திருமதி சிவஞான சோதி குரு அவர்கள் இவ் நடன விழா சிறப்புற நடைபெறுவதற்கு பல வழிகளிலும் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும், ஒத்துழைப்புகளையும் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது
அதிதிகளுக்கு
மலர் மாலை அணிவித்து பிரதான மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டதை
தொடர்ந்து அதிதிகளால் மங்கள விளக்கேற்றப்பட்டு இறைவணக்கத்துடன்
நிகழ்வுகள் ஆரம்பமாகின .
பாடசாலை அதிபர் திரு S. ரவிச்சந்திரன் அவர்கள் நிகழ்விற்கு தலைமை தாங்கியதோடு தலைமை உரையையும் நிகழ்த்தி இருந்தார்
மண்முனைக்கோட்ட
நடன பாட ஆசிரியர்களும் , நடனம் கற்கின்ற மாணவர்களும் இணைந்து நடன
ஆற்றுகையை முன்னெடுத்தனர் ,
நடன விழாவில் நடன ஆசிரியர்களினாலும், அவர்களால்
பயிற்றுவிக்கப்பட்ட, மாணவர்களினதும் நடனங்கள் மேடையை அதிரவைத்திருந்தன. இந்த
சர்வதேச நடன தின விழாவில் இடம்பெற்ற நடன ஆற்றுகைகள் அனைவரினதும்
கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு, அனைவரினதும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டது .
நடன விழாவிற்கு மண்முனை பற்று கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்