கிழக்கு இலங்கையின் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான மட்டக்களப்பு புளியந்தீவு அருள்மிகு ஆனைப்பந்தி சித்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான வருடாந்த உற்சவத்தின் தேரோட்டத் திருவிழா இடம்பெற்றது.
இன்று காலை வசந்த மண்டப பூஜைகளை தொடர்ந்து அடியார்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் விக்னேஸ்வர பெருமானின் தேரோட்டத் திருவிழா பக்தி பூர்வமாக இடம்பெற்றது
வடம் பிடித்தால் வாழ்வு சிறக்கும் எனும் கருப்பொருளுக்கு அமைவாக ஆலயத்தின் வருடாந்த தேரோட்டம் சிறப்பாக இடம்பெற்றது.
இவ்வாலயத்தின் திருக்கொடியேற்ற திருவிழாவானது கடந்த மூன்றாம் திகதி நண்பகள் சிறப்பு பூஜைகளின் பின் ஆலயத்தின் உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ கணேச திவி சாந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது
ஆலயத்தின் வருடாந்த உற்சவ நிகழ்வுகளில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து அடியார்கள் கலந்து கொண்டனர்.
*வரதன்*