மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு-2025.05.16




 

 












முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு  ''முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் நிகழ்வொன்று
இன்று (16) திகதி மட்டக்களப்பு  மட்டக்களப்பு காந்தி பூங்கா நினைவு தூபியின் முன்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில்   காந்தி பூங்காவில் உள்ள நினைவுத்தூபி முன்பாக அருட்தந்தையர்களினால் ''முள்ளிவாய்க்கால்  கஞ்சி" காய்ச்சப்பட்டு வீதியால் சென்ற மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட  அருட்தந்தையர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், உள்ளிட்டோரினால் முள்ளி வாய்க்காலில் இறந்த உறவுகளை நினைவு கூறுகின்ற வகையில் வீதியால் பயணித்த மக்களுக்கும் உப்பில்லா கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.