இலங்கையில் டெங்கு வரவும் மாவட்டங்களில் முக்கிய மாவட்டமும் சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் டெங்கு ஒழிப்பு பரிசோதனை வேலை திட்டத்தில் 1500 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் 26 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் இருவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ உதயகுமார் தெரிவித்தார்
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரனின் வழிகாட்டலில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமாரின் தலைமையில் மேற்படி திடீர் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன
குறித்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள அரச கட்டிடங்கள், பாடசாலைகள், வீடுகள், பொது இடங்கள் என்பன இப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன் இதில் 26 இடங்களில் டெங்கு குடம்பிகள். கண்டுபிடிக்கப்பட்டதுடன் இருவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
பல அரச நிறுவனங்களில் டெங்கு பரவும் இடங்களாக காணப்பட்ட போதிலும் அவற்றை அறிவுரைகளின் மூலமாக உடனடியாக சீர் செய்தமையும் குறிப்பிடத்தக்கதென வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சில இடங்களில் டெங்கு நோயாளர்கள் இடங்கணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு