மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் 33 ஆவது ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை (24) பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.



 

















































தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை அதிபர் நாகராஜா இதயராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,மட்டக்களப்பு   மாநகரசபை ஆணையாளர் N.தனஞ்ஜெயன்  பிரதம விருந்தினராகவும்   கௌரவ விருந்தினராக  ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளர்     S. ஜெயகுமார்,   மற்றும்   சிறப்பு விருந்தினர்களாக  தரிசனம்  பாடசாலை  முன்னாள் மாணவி பிரதீபா சுதாகரன்  மற்றும்  சமூக செயற்பாட்டாளர் சிவம் வேலுப்பிள்ளை அவர்களும்  கலந்து சிறப்பித்தனர்

இதன்போது தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் ,கவிதை,பாடல்,  நடனம் ஆகிய நிகழ்வுகள் அரங்கேறின.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக  கலந்து கொண்டவர்களுக்கு   நினைவுப் பரிசில்கள்  வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
விழாவிற்கு மாணவர்களின் பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள் பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .

FREELANCER