தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் தேர்தலிலும் ஒரு உறுதியான ஆட்சியை கட்டியமைப்போம் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்
தொழில் முயற்சியாளர்களை எமது அரசாங்கம் வரவேற்கின்றது ஆனால் அரசியலுக்காக மக்கள் மத்தியிலே வந்து பேரம் பேசுகின்ற அரசியல் என்று சொல்லி சொத்து சேர்க்க முயன்றால் எமது அரசாங்கத்திலேயே அதற்கான விசாரணைகளை முகம் கொடுக்க வேண்டி வரும்
எமது அரசாங்கத்திலேயே போலியான விமர்சனங்கள் தோற்கடிக்கப்படும் எமது ஜனாதிபதி அவர்களின் ஆட்சி காலத்தில் தேசிய ஒற்றுமை கட்டியெழுப்பப்பட்டு இந்த நாட்டின் ஊழல் மோசடி லஞ்சம் வீண்விரயம் பிழையான அரசியல் கலாச்சாரம் துடைத்தறியப்பட்டு நாட்டை சரியான வழியில் அபிவிருத்தி பாதையில் அழைத்துச் சென்று ஏனைய நாடுகள்
போன்று எமது நாட்டையும் ஒரு முன்மாதிரியான கட்டி எழுப்புவோம் தேசிய மக்கள்
சக்தி ஆட்சியிலே எதிர்வரும் தேர்தலிலும் ஒரு உறுதியான ஆட்சியை
கட்டியமைப்போம்
என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மட்டக்களப்பில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
வரதன்