பிறந்திருக்கும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மத்திய வங்கியினால் அரசாங்கத்தின் நலத்திட்டங்களை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் அரச வங்கிகளின் பணிகள் இன்று காலை சுப நேரத்தில் உத்தியோபூர்வமான வங்கியின் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன
இதேவேளை மட்டக்களப்பு மக்களின் வாடிக்கையாளர்களின் சிறப்பான சேவையினை கருத்தில் கொண்டு நகரில் உள்ள இலங்கை வங்கியின் நகர கிளையில் புத்தாண்டு பணிகள் வங்கியின் முகாமையாளர் திருமதி தாட்சாயினி பவான் தலைமையில் இன்று காலை வங்கி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன
நிகழ்வின் ஆரம்பத்தில் வங்கியின் கீதம் இசைக்கப்பட்டு அதன் பின் மங்கள விளக்கேற்றியதன் பின்பு மதத் தலைவர்களின் ஆசி உரை இடம்பெற்றது
புத்தாண்டு பணிகளை ஆரம்பிக்கும் முன்பு மத தலைவர்களிடம் வங்கியின் ஊழியர்கள் ஆசீர்வாதங்களை பெற்றதன் பின்பு வங்கியின் பணிகள் முகாமையாளர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது
புத்தாண்டில் முதல் நாளில் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் முகாமையாளர்களால் கை விசேஷம் வழங்கி வைக்கப்பட்டது..
வரதன்