இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் ஊழலற்ற ஒரு ஆட்சியை முன்னெடுக்க பாடுபடுவோம் இம்முறை வெற்றி நிச்சயம் என -ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகர சபை முதன்மை வேட்பாளர் எஸ். ரகுநாதன் தெரிவித்தார்
இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் எமது கட்சி சார்பாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஊழலற்ற ஒரு ஆட்சியை முன்னெடுப்பதற்காகவும் சிறந்த மாநகரை கட்டியெழுப்புவதற்காகவும் நாம் இந்த தேர்தலில் போட்டியிடு கின்றோம்
முன்பிருந்த ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து வந்தனர் எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு முதல் முதலாக இம்முறை தான் எமது தொலைபேசி சின்னத்தில் போட்டியிட முன்வந்துள்ளோம்
எமது கட்சியின் வெற்றிக்கான தேர்தல் பணிகளை நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம் நாம் சிறந்த வேட்பாளர்களையே களம் இறக்கி உள்ளோம்
பொது மக்களுக்கான சேவையை உருவாக்க நாம் திட்டமிட்டுள்ளோம் எமது வேட்பாளர்களின் கடின உழைப்பினால் நாம் இம்முறை நிட்சயம் வெற்றி பெற்று இந்த மாநகர சபையை கட்டியெழுப்ப பாடுபடுவோம் என
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகர சபை முதன்மை வேட்பாளர் எஸ். ரகுநாதன் மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு கருத்து தெரிவித்தார் .
வரதன்