90 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுடன் தொலைபேசியில் பேசுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆர்வம் காட்டுவது ஏன் ?

 


தற்போது 90 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுடன் தொலைபேசியில் பேசுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி கோரியுள்ளார்.

ஆனால், அந்த கோரிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது.கடந்த 9ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முன்னாள் ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபரான பிள்ளையானுடன் பேசுவதற்கு தொலைபேசியில் சந்தர்ப்பம் கோரப்பட்ட போதிலும், சந்தேக நபருடன் தொலைபேசியில் பேசுவது சட்டவிரோதமானது என்பதனால் அந்த சந்தர்ப்பத்தை மறுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.