மட் /சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் 2025 ஆண்டு இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் குறிஞ்சி இல்லத்தின் அலங்காரம் பொது மக்களையும் ,மாணவர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இலங்கையின் தென்மாகாணத்தில் பிரசித்தி பெற்று காணப்படும் முகமூடிக் கைத்தொழிலை பிரதிபலிக்கும் வண்ணம் குறிஞ்சி இல்லம் அலங்கரிக்கப்பட்டது சிறப்பம்சமாகும் .
மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டுபோட்டியொன்றில் தென்மாகாண பாரம்பரியத்தை மையப்படுத்தி குறிஞ்சி இல்லம் அமைக்கப்பட்டது இது முதல்தடவையாகும் .
கிழக்கு மாகாணமும் எமது கலை கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியமும் தேசிய ரீதியில் வளர்ச்சியடைய வேண்டும் எனும் நோக்கத்திற்காக குறிஞ்சி இல்லம் தென்மாகாண பாரம்பரியத்தை மையப்படுத்தி அலங்கரிக்கப்பட்டது குறிப்பிட தக்கதாகும் .
குறிஞ்சி இல்லத்தை சித்திர ஆசிரியர் S.கேமமாலினி அவர்கள் வடிவமைப்பதற்கு பழைய மாணவன் Renu Charan ,ஆசிரியர்கள்,மற்றும் இல்ல மாணவர்கள் பங்களிப்பு செய்திருந்தார்கள்.
(1).jpg)




