நாட்டின் பல பகுதிகளில் குரங்குகளால் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட குரங்கு கருத்தடை திட்டம் தோல்வியடைந்தது.
மாத்தளை மாவட்டத்தின் ஹரஸ்கமவில் ஆரம்பிக்கப்பட்ட முன்னோடித் திட்டம் தற்போது முடங்கியுள்ளது.இன்றைய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாத்தளை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அஜித் மணிக்கும, பல சவால்கள் காரணமாக இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்
கருத்தடை செய்வதற்கு கால்நடை மருத்துவர்களின் பற்றாக்குறையும், கிரித்தலை கால்நடை மருத்துவப் பிரிவுக்கு குரங்குகளை ஏற்றிச் செல்வதற்கு அதிக செலவினங்களும் முதன்மையான தடையாக இருப்பதாக விவசாயப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயங்கள் தொடர்பில் புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கமகெதர திஸாநாயக்க மற்றும் விவசாய அபிவிருத்தி பிரதியமைச்சர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.