வரதன்
கிழக்கு மாகாணத்தை அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற பரீட்சைகளில் தேசிய மட்டத்தில் மாகாண மட்டத்தில் முதல் இடத்திற்கு கொண்டு சென்ற முன்னாள் மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாத்தா குலேந்திரகுமார் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது
மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய கல்குடா கல்வி வலயம் மற்றும் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பணிப்பாளராக இருந்து சிறப்பாக பணியாற்றி பின்பு மாகாண கல்வி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றதன் பின் மாகாண மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி செற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக கல்வி அமைச்சின் மேலதிக ஆணையாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுச் சென்ற திருமதி சுஜாத்தா குலேந்திரகுமாரை கௌரவிக்கும் நிகழ்வு மட்டு வலயத்தில் கல்வி பணிபுரியும் அதிபர்களால் முன்னெடுக்கப்பட்டது
பதவி உயர்வு பெற்றுச் செல்லும் மேலதிக ஆணையாளர் அவர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தப்பட்டு வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டதன் பின்னர் கௌரவிப்பு நிகழ்வுகள் இங்கு இடம் பெற்றது
மட்டு வலய கல்வி பதில் பணிப்பாளர் திருமதி ரவிக்குமார் மற்றும் மட்டு கல்வி வலயத்தின் திட்டமிடல் பணிப்பாளர்கள் புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் பாடசாலையின் அதிபர் மட்டக்களப்பு கோட்டை கல்வி அதிபர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்
முன்னாள் மாகாண பணிப்பாளர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்த சிறப்பான கல்வி பணிகள் பற்றி இங்கு கலந்து கொண்டு அதிபர்களினால் கருத்துரைகளும் இங்கு பெற்றது , கௌரவிப்பின் நிகழ்வில் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றது