தேர்தலில் தனக்கு ஏற்பட்ட தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் என
முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
யாழ்ப்பாணத்தில் நேற்று(19) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த தேர்தலில் எமக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனை சமாளிக்க அரசியலில் தற்காலிக ஓய்வு என்றும் கூறலாம். அமைச்சராக இருந்த போது, தலைக்கு மேலாக வேலை இருந்தது. தற்போது அது இல்லை.
சமூக வலைத்தளங்கள் ஊடாக எனக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டனர். தற்போது சமூக ஊடகங்கள் குடிசை கைத்தொழில் போன்று பலருக்கும் வருமானம் ஈட்டிக்கொடுக்கிறது.
தற்போது கையில் போனுடன், மலசல கூடம் முதல் படுக்கையறை வரையில் சென்று வீடியோக்களை பார்க்க கூடிய நிலைமை இருப்பதால், அது இலகுவில் மக்கள் மத்தியில் சென்றடைகிறது.
அவ்வாறான சமூக ஊடகங்கள் ஊடாகவே என் மீது அவதூறுகள் பரப்பப்பட்டன.