ஜீப் ரக வண்டியொன்று கங்கையில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் .

 

   குளியாப்பிட்டி , கம்புராப்பொல ஓயா கங்கையில் ஜீப் ரக வண்டியொன்று பாலத்தில் இருந்து பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் .


அதிக வேகம் காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் 25,27 வயது குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.