வரதன்
தமிழ் அரசுக்கட்சி யில் இருந்த பேய்கள் அனைத்தும் முற்றாக விரட்டப்பட்டுள்ளது கட்சியில் களம் இறங்கியுள்ள வேட்பாளர்கள் தூய்மையான முன்னோக்கி பயணிக்கயுள்ள இது ஒரு மதிப்புள்ள விடயமாகும் - மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசுக்கட்சி யின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராசமாணிக்கம் சாணக்கியன்
இம்முறை இடம் பெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியில் களம் இறங்கியுள்ள வேட்பாளர்கள் இலங்கை தமிழரசு கட்சியிலுள்ள தனித்துவமான தூய்மையான வேட்பாளர் பட்டியலுடன் முன்னோக்கி பயணிக்க உள்ளதாகவும் இது ஒரு மதிப்புள்ள விடயமாகும் எனவும்
இருப்பிடம் சிலர் வெளியில் இருந்தும் சில வேட்பாளர்களை களம் இறக்க வேண்டி முயற்சி எடுத்தனர் அது இம்முறை தடுக்கப்பட்டது இதற்காக வடக்கு கிழக்கு அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான முடிவுகள் எட்டப்பட்டது இம்முறை தமிழ் அரசுக்கட்சி கட்சியில் இருந்த பேய்கள் அனைத்தும் முற்றாக விரட்டப்பட்டுள்ளதாகவும்
எமது கட்சியை ஆரம்பித்த தலைவரது காலத்தில் தாங்கள் நினைத்தபடி இவர்கள் முடிவுகளை எடுத்தார்கள் ஆனால் இப்போது அவை முற்றாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த காலங்களில் எமது கட்சியில் தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்படாதவர்களாகவும் சுயநலத்திற்காகவும் செயற்பட்டவர்களாகவே இருந்தனர்
என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராசமாணிக்கம் சாணக்கியன் மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்