மட்டு.புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.



 

















 

 

(கல்லடி செய்தியாளர்)

 

 

பி.ஜே.எவ்.எம் அறக்கட்டளை மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலய மாணவர்களுக்கென ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை  வெள்ளிக்கிழமை 22.11.2024 வழங்கி வைத்தது.

வித்தியாலய அதிபர் பி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,அறக்கட்டளைப் பணிப்பாளர் உதயணி பண்டார ஹெற்றிகர,பணிப்பாளர் சபை உறுப்பினர்களான திருமதி சுமுது ஹெட்டி ஹெதர மற்றும் திருமதி நந்தலால் செனரதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பாடசாலை மாணவர்கள் 36 பேருக்குக் கற்றல் உபகரணங்களைக் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.