BATTI VARATHAN
நாட்டில் இனிமேல் இன மத வேறுபாடுகளுக்கு இடமில்லை நாம் எல்லாரும் இலங்கையர் மட்டும்தான் நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் தமிழர்கள் முஸ்லிம்கள் எல்லாரும் ஒற்றுமையாக வாக்களித்து வெற்றி அடைய வைத்துள்ளனர்- கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்ன சேகர.
தமிழரது பகுதிகளில் எனக்கு தமிழில் கதைக்க விருப்பம் திருமலையில் கடந்த 35 வருடங்களுக்கு முன் தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்து வந்தோம் தற்போது மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அதிகமான நேரங்களில் தமிழில் தான் கடமை களை முன்னெடுத்து வருகின்றேன்
நேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் நாட்டில் இனிமேல் இன மத வேறுபாடுகளுக்கு இடமில்லை என்று இனிமேல் நாம் எல்லாரும் இலங்கையர் மட்டும்தான் நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் மக்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் எல்லாரும் ஒற்றுமையாக வாக்களித்து வெற்றி அடைய வைத்துள்ளனர்.
இனி நமக்கு எல்லாருக்கும் ஒரே நாடு இலங்கை என்ற அடையாளம் தான் எனவேகிழக்கு மாகாணத்தை கட்டி எழுப்ப அனைவரது ஒத்துழைப் பையும் நான் வேண்டி நிற்கின்றேன் தமது மாகாணத்தில் சகல மக்களும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற ஆதரவினை வேண்டி நிற்பதாக
மாகாணத்தின் புதிய ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்ன சேகர இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்





