நாட்டின் பல பகுதிகளில் மூடுபனி போன்ற தூசி நிறைந்த நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது .

 


கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவாகவே இருண்ட காலநிலை நிலவுவதாக ஊடகப் பேச்சாளர் பேராசிரியர் அஜித் குணவர்தன தெரிவித்தார்.

இந் நாட்டில் வழமையாக காற்றின் தரக் குறியீடு 50 என்ற குறைந்த மதிப்பில் இருப்பதாகவும் ஆனால் அண்மையில் பெய்த கனமழை காரணமாக குறியீட்டெண் உயர்வினால், நாட்டின் பல பகுதிகளில் மூடுபனி போன்ற தூசி நிறைந்த நிலை காணப்படுவதாக அவர் கூறினார்.

பாதகமான வானிலை காரணமாக வடக்கு மற்றும் உள்நாட்டு எல்லைகளில் உள்ள காற்று மாசுபாடுகள் இந்நாட்டினுள் பிரவேசித்தமை இந்த நிலைமைக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.