முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊட்டச்சத்து நிறை உணவு கண்காட்சி இடம்பெற்றது .










 



ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு 


 

 

இன்றைய சூழலில் தொற்றா  நோய்கள் பலவற்றை கொண்டு வரும் பாஸ் பூட்ஸ்  உணவு பழக்கங்களில் இருந்து மக்களை விடுவிக்க முகமாக சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊட்டச்சத்து நிறை உணவு கண்காட்சி இடம்பெற்றது .

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இதனை ஏற்பாடு செய்திருந்தது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பயிற்சி பயிற்சி பெற்றுவரும் பொது சுகாதார மருத்துவ மாதுக்கள் பயிற்சியாளர்களினால் சுமார் 300க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து நிறை உணவுகள் இங்கு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன .

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.
 உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற கண்காட்சி திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எந்திரி எம் சிவலிங்கம் பிரதம அதிதியாகவும் மட்டக்களப்பு பிராந்திய மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கல சமூகநல வைத்திய நிபுணர் டாக்டர் எஸ் லதாகரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக உட்கார்ந்து கொண்டனர்

பெரும் எண்ணிககையிலான வைத்திய அதிகாரிகள், தாதியர்கள்,பொதுச் சுகாதார பரிசோதகவர்கள், பொது சுகாதார மருத்துவமாகு பயிற்சியாளர்கள் என பெருமளவிலனோர் கண்காட்சியை கண்டு களித்ததுடன் பெருமளவிலான பொதுமக்களும் கண்காட்சியை பார்வையிட்டனர்.