க.பொ.த (உயர்தரப்) பரீட்சை இன்று திங்கள் 2024.11.25 நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகி, பரீட்சை டிசம்பர் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்களில் பொலிசார் பாதுகாப்பு வழங்க, அமைதியான முறையில் இன்று ஆரம்பமானது.
கொட்டும் மழையிலும் இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வருகை தந்த கல்லடி விவேகானந்தா கல்லூரி மாணவிகள் மற்றும் கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை காணக்கூடியதாக்க இருந்தது .
இம்முறை அகில இலங்கை ரீதியாக கல்விப்பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்கு 320,183 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அவர்களில் பாடசாலை ரீதியிலானவிண்ணப்பதாரர்கள் 253,390 பேரும்79,793தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குகின்றனர்.













