அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வெளியிட்ட கருத்துகளை
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விமர்சித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
அனுர குமார திஸாநாயக்க இதை மறுத்தார்,
ரணில் விக்கிரமசிங்க முன்னர் கூறியிருந்த போதிலும் தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவர் வலியுறுத்தினார். மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குள் அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்று கூறப்படும் கூற்றுக்களையும் அனுரகுமார திஸாநாயக்க மறுத்தார்.