தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்தவருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு சுயேட்சை குழுக்கள் இறக்கப் பட்டுள்ளன. கோவிந்தன் கருணாகரன்

 

 




வரதன்





சுயேட்சை குழுக்கள் இம்முறை  பல ஆயிரக் கணக்கான நிதிகளை செலவிட்டு  தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்தவருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு இறக்கப் பட்டுள்ளன-ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் -கோவிந்தன் கருணாகரன்


இடம்பெறவுள்ள பாராளுமன்றத் பொது  தேர்தல் ஆனது வட கிழக்கிற்கு ஒரு முக்கியமான தேர்தலாக காணப்படுகின்றது மட்டக்களப்பு மாவட்டத்திலே பல சுயேட்சை குழுக்கள் இம்முறை களமிறங்கப்பட்டுள்ளது  இவர்கள் பல ஆயிரக் கணக்கான நிதிகளை செலவிட்டு அரசியல் செய்கின்றனர் இது யாருக்காக இதில் பல சுயேட்சை குழுக்கள் தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்த வருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன.


மட்டக்களப்பு மாவட்டத்திலேயே வரலாற்றில் ஒரு தேசியக் கட்சியில் முதல் முறையாக ஒரு சிங்கள இனத்தவர் களமிறக்கப்பட்டுள்ளார் இதன் பின்னணிகளை நோக்கும் போது சுயேச்சைகள் தாங்கள் வாக்கெடுக் காவிட்டாலும் பரவாயில்லை தமிழினத்திற்கு துரோகம் இழைப்பதற்காகவே அவர்கள் இம்முறை போட்டியிடுகின்றார்கள்.

 மாவட்டத்தில் உள்ள மக்கள் எமது கட்சிக்கு பூரண ஆதரவினை தந்து இம்முறை தேர்தலில் நாங்கள்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் பொது தேர்தலில் போட்டிடுகின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் வேட்பாளர் அறிமுக விழா நிகழ்வு இன்று மட்டக்களப்பு அமெரிக்கன் மெஷின் மண்டபத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளருமான கோவிந்தன் கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது தமிழர்களின் ஒற்றுமை நிலைத்திருக்க சங்கு முழங்கட்டும் எனும் தலைப்பின் கீழ் தமிழ் தேசியத்தின் சின்னமாக சங்கு சின்னத்தில் இடம்பெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுன்ற வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு இங்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்