எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் 2024 இற்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டம்பர் 04ம் திகதி ஆரம்பமாகவுள்ளதனால் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு அத்தாட்சிபடுத்தும் அலுவலர்களுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சியகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (22) நடைபெற்றது.
தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் தபால்மூல வாக்களிப்பு அத்தாட்சிபடுத்தும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடயதானங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக தெளிவூட்டப்பட்டது.
இந் நிகழ்வில் உதவித் தேர்தல்கள் ஆணையளர் எம்.பி.எம் சுபியான், திணைக்கள தலைவர்கள், அரச உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.