இலங்கையில் 9-ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து, இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்ப் பொதுவேட்பாளர் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மேலும் நாளை காலை 9 மணிக்கு தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு வணக்கம் செலுத்துவார். அதன் பின் ஊடகச் சந்திப்பு இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.