முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய அவர்களின் காலத்தில் நாட்டில் இனவாதம் மதவாதம் தலைவிரித்து ஆடியது எமது சஜித் பிரேமதாசா ஜனாதிபதி வேட்பாளர் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய ஒரு தலைவர் -ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சரருமான சோ. கணேசமூர்த்தி
இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ஆனது நாட்டுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது ஒன்றாகும் எமது கட்சியின் வேட்பாளர் ஆன சஜித் பிரேமதாசா அவர்கள் நாட்டிலுள்ள இனவாதம் அற்ற சிறந்த தலைவர்களில் ஒருவர் மட்டக்களப்பு மாவட்டத்தை பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கோடு உள்ள ஒரு ஜனாதிபதி வேட்பாளராக காணப்படுகின்றார்
கடந்த காலங்களில் அவர் வீடமைப்பு துறைக்கு பொறுப்பாக அமைச்சராக இருந்தபோது எமது மாவட்டத்திற்கு அதிகப்படியான வீட்டுத் திட்டங்களை வழங்கி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்
மாவட்ட மக்களின் நலன்களில் அக்கறை உள்ள ஒரு தலைவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய அவர்களின் காலத்தில் நாட்டில் இனவாதம் மதவாதம் தலைவிரித்து ஆடியது ஆனால் எமது ஜனாதிபதி வேட்பாளர் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய ஒருவரையே நாம் தெரிவு செய்துள்ளோம்
நமது மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் அதிகப்படியான வாக்குகளை வழங்கி அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் எமது மாவட்டம் அவருக்கு அதிகப்படியான வாக்குகளை வழங்கிய முதன்மை மாவட்டமாக காணப்பட வேண்டும் என
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சரருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி மட்டக்களப்பில் கட்சி அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்