வரதன்
பெண்களுக்கு அரசியலில் 25 வீதமான இடத்தினை வழங்கிய. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிக்கு கிழக்கு மாகாண பெண்கள் அதிக வாக்குகளை வழங்க தீர்மானித்துள்ளனர்- மட்டக்களப்பு மாவட்ட பிரதான அரசியல் கட்சிகளின் மகளிர் அணி தலைவிகள் தெரிவிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிக் கூட்டங்களிலும் இன்று பெண்கள் தான் அதிகமாக இருப்பார்கள் அதற்குக் காரணம் ரணில் விக்ரம சிங்க மாவட்டத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ரனில் விக்கிரமசிங்க வை ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வைப்பது என்று தீர்மானித்துள்ளனர் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மகளிர் அணி தலைவி திருமதி சசிகலா விஜய தேவா மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
முன்னாள் ஜனாதிபதி நாட்டு மக்களை இக்கட்டான காலகட்டத்தில் விட்டு ஓடிச் சென்ற போது பிரதமராக முதுகெலும்பு உடன் இந்த நாட்டை பாரம் எடுத்தவர் தான் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது வாக்குப் பிச்சை கேட்டு வரும் எதிர்க்கட்சித் தலைவர் அப்போது இந்த நாட்டை பொறுப்பெடுத்து இருக்கலாம் தானே
எரிபொருள் நிலைய நிலையங்களில் மண்ணெண்ணெய் காக வரிசையில் நின்று உயிரை விட்டவர்களும் இருக்கிறார்கள் இவற்றையெல்லாம் தீர்த்து வைத்த ஜனாதிபதிக்கு நன்றி கடனாக வாக்களிப்பதில் என்ன தவறு உள்ளது ஜனாதிபதிக்கு வாக்களிப்பது நமது மக்களின் கடமை என
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சியின் மகளிர் அணி தலைவி திருமதி சுசி கலா அருள் தாஸ் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.