மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு .


 

 

 

மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனக்கு மீண்டும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


“மறைந்த சமரவீரவின் குடும்பத்தவரான சஞ்சலா சமரவீர குணவர்தன ஏற்கனவே மாத்தறை மாவட்டத்தின் சமகி வனிதா பலவேகய மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்” என அக்குரஸ்ஸவில் நேற்று (17) நடைபெற்ற தனது பேரணியில் பிரேமதாச அறிவித்தார். 

தென்னிலங்கையில் கறுவாத் தொழிலை அபிவிருத்தி செய்வதாகவும் குறித்த பேரணியின் போது அவர் உறுதியளித்தார்.