நாடு ஆபத்தில் இருந்தபோது மீட்டெடுத்த ஜனாதிபதியின் வெற்றிக்காக இன்று அதிக மக்கள் எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர் - ஈரோஸ் இரா பிரபாகரன்

 

 

வரதன்




 

நாடு ஆபத்தில் இருந்தபோது மீட்டெடுத்த ஜனாதிபதியின் வெற்றிக்காக இன்று அதிக மக்கள் எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர் அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது அனைத்து தமிழ் பேசும் மக்களின் நிலைப்பாடாகவே உள்ளது- ஈரோஸ் கட்சியின் செயலாளர்நாயகம் இரா பிரபாகரன்

எமது கட்சியின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரமானது எதிர்வரும் 20 திகதி முதல் தேசிய ரீதியில் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக எம்மால் இயன்றவரை  முன்னெடுக்க உள்ளோம்  அவரது வெற்றிக்காக இன்று அதிக மக்கள் எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடு ஆபத்தில் இருந்தபோது மீட்டெடுத்த ஜனாதிபதியின் வெற்றிக்காக ஆதரவு வழங்க வேண்டும் என்பது அனைத்து தமிழ் பேசும் மக்களின் நிலைப்பாடாகவே உள்ளது


ஹிஸ்புல்லா தனது பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி அழைத்து திறந்து வைத்ததுடன் மகனின் திருமண வைபவத்தின் போதும் அவர் பங்கு பங்கேற்று இருந்தார் இருப்பினும் அடுத்த நாள் தமது கட்சியின் ஆதரவு சஜித் பிரேமதாசாவுக்கு என்று தெரிவித்திருந்தனர் இரோஸின் நிலைப்பாடு அவ்வாறு இல்லை
நாட்டிற்கு நன்மையான விடயங்கள்  முன்னெடுக்கும் எவருடனும் நாம் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்

 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவிடமும் மக்களை நேசிக்கின்ற சில நல்ல குணங்கள் இருக்கின்றன.  எதிர்காலங்களில் சஜித்தை ரணிலுடன் இணைத்து  ரணில் ஜனாதிபதியாகவும் சஜித் பிரதமர்ரக  இருக்கும் ஆனால் நாட்டிற்கு பல நல்ல விடயங்கள் இடம் பெற சந்தர்ப்பம் உள்ளது அதனைத் தொடர்ந்து அடுத்த 10 வருடங்கள் சஜித் ஜனாதிபதியாக இருக்கலாம் அதற்கு நாம் உதவ முடியும்  இது உண்மையான எதார்த்தமான ஒரு முடிவாக இருக்கும் என


ஜனாதிபதியின் வெற்றிக்காக 34 அரசியல் கட்சிகள் அவருடன் ஒப்பந்தம் செய்த பின் அவரது தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக முன்னெடுக்கவுள்ள அரசியல் கட்சிகளில் ஒன்றான.இழவர் ஜனநாயக முன்னணி கட்சியின் செயலாளர் நாயகம் இராஜநாதன் பிரபாகரன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்