ஜனாதிபதி வேட்பாளர்களை நோக்கி நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதோடு
வெற்றி வாய்ப்புள்ள பிரதான 3 வேட்பாளர்களுக்கும் நாங்கள் வலியுறுத்தி வரும்
விடயம். ஒற்றையாட்சியை நீக்கி தமிழர்களுடைய சுயநிர்ணய அங்கீகாரம் சமஷ்டி
அரசியலமைப்பை கொண்டு வர வேண்டும்.
இல்லாறான உத்தரவாதத்தை தங்களது தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக அதை
வௌிப்படுத்துவதன் மூலம் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக
சிந்திக்க முடியும்.
பொது வேட்பாளரை நிறுத்தி இருக்கும் தரப்பினரிடம் நாங்கள் வேண்டுக்கோள் இந்த
தேர்தல் தமிழர்களுக்கு ஒரு முக்கியமான ஒரு தேர்தல் ஆக காணப்படுகிறது.
காரணம் பொதுவாக இந்த தேர்தலில் மக்களுக்கு ஆர்வம் குறைவாகவே
காணப்படுகிறது.
பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கும் பா. அரியநேத்திரன் மகிப்பெரிய
தவறை செய்து இருக்கிறார். உங்களது முடிவுகள் என்பது எங்களது இனம் அழிவை
நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தயவு செய்து உங்களது நிலைப்பாட்டை
கைவிடுங்கள், பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டில் இருந்து பா.
அரியநேத்திரன் விலக வேண்டும்.