ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் அவசர பயணமாக இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரை அஜித் தோவல், சந்திக்க உள்ளதாகவும் இலங்கையின் சமகால மற்றும் எதிர்கால அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அவரது இந்த பயணம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் எதனையும் வெளியிடவில்லை.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில், அஜித் தோவலின் இந்த பயணம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.