கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தரும் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருமான வி ஈஸ்பரன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் தலைமையில் இன்று (28) இடம் பெற்றது.
கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தரும் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தராக கடமையாற்றும் வி. ஈஸ்பரன் தனது அரச பணியில் இருந்து ஓய்வு பெற்று செல்வதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களினால் இந் நிகழ்வு ஏற்பாட்டு செய்யப்பட்டு இருந்தது.
சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தரினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் திரை மறைகாயாக காணப்பட்ட பல வீர வீராங்கனைகளை மாவட்ட தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான ஊடகமாக செயற்பட்டார்.
இவருடைய சேவைக்காலத்தில் கிழக்கு மாகாண வீரர்கள் பல துறைகளில் விருதுகளை சுபகரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது விளையாட்டு உத்தியோகத்தர்களினால் அனுபவ பகிர்வு மேற்கொள்ளப்பட்டதுடன் சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.